ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் டாபூ மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான மீட்புதவிப் பணிக்குச் சீன அரசவை ஹாங்காங் மற்றும் மக்கௌ விவகார அலுவலகத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் அவசர நிலை நிர்வாகப் பிரிவு புதிய நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. 3ஆம் நாள் இவை ஹாங்காங்கைச் சென்றடைந்து ஒப்படைக்கப்பட்டன.
தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அதற்கான மீட்புதவிப் பணியின் நிலையை மத்திய அரசு பெரும் கவனம் செலுத்தியுள்ளது. நாடு முழுவதிலும் இருந்த சக்திகளை ஹாங்காங்கில் வேகமாகத் திரட்டியுள்ளது. சீன அரசவை ஹாங்காங் மற்றும் மக்கௌ விவகார அலுவலகத்தைச் சேர்ந்த பணிக் குழு நவம்பர் 27ஆம் நாள் அங்கே சென்றடைந்தது அதன் ஏற்பாட்டில் குவாங்துங் மாநிலத்திலிருந்து மீட்புதவி உபகரணங்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைப் பொருட்கள் தொடர்ச்சியாக ஹாங்காங்கிற்கு வந்து சேர்ந்துள்ளன. இந்த உபகரணங்கள் தீ விபத்து இடத்திலுள்ள கண்காணிப்பு மற்றும் அவசர மீட்புப் பணிக்குப் பயனுள்ளதாக உதவியளித்துள்ளன என்று ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் அரசாங்க நிர்வாகப் பிரிவின் தலைவர் செகுவோஜி தெரிவித்தார்.
