ஆக்சிஸ் வங்கி அதிரடி முடிவு: உற்பத்தித் திறனை அதிகரிக்க 3,100 ஊழியர்கள் குறைப்பு  

Estimated read time 1 min read

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி, தனது நிதிநிலை அறிக்கையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
2025-26 நிதியாண்டில், வங்கியின் ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கையில் சுமார் 3,100 பேர் குறைக்கப்பட்டுள்ளனர்.
வங்கித் துறையில் தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் எந்த அளவிற்கு வேலைவாய்ப்புச் சூழலை மாற்றியமைத்து வருகிறது என்பதற்கு இந்தச் செயல்பாடு ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
1.04 லட்சமாக இருந்த பணியாளர் எண்ணிக்கை, தற்போது 1.01 லட்சமாகக் குறைந்துள்ளது.

You May Also Like

More From Author