இதில் தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அனைத்து மாநில முதலமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இதற்காக முதலமைச்சர் விஜய் நேற்று தனி விமானத்தில் டெல்லி சென்றார்.
விமான நிலையத்திலிருந்து மதியம் 1 மணி அளவில் தமிழ்நாடு இல்லம் சென்ற அவர், அங்கு அளிக்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பை ஏற்றுக்கொண்டு தனது அறைக்குச் சென்று ஓய்வெடுத்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் தங்கியுள்ள தமிழ்நாடு இல்லத்தின் கேன்டீனில் உள்ள ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
– வைஷ்ணவி பாலு
