72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம்

Estimated read time 0 min read

72 குண்டுகள் முழங்க இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் காலமான அவரது உடல், இறுதி அஞ்சலிக்காக தேனியில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு திரண்டிருந்த அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு சார்பில் பாரதிராஜா உடலுக்கு அமைச்சர்கள் நிர்மல்குமார், வன்னியரசு மற்றும் தேனி ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளும் அரசு பிரதிநிதிகளாக வந்து மலர் வளையம் வைத்து முழு மரியாதை செலுத்தினர்.

இதனைதொடர்ந்து 72 குண்டுகள் முழங்க இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. நாட்டின் தலைசிறந்த ஆளுமைகளுக்கு வழங்கப்படும் இறுதி மரியாதை பாரதிராஜாவுக்கும் வழங்கப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

You May Also Like

More From Author