மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Estimated read time 0 min read

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தற்போது விடுப்பில் உள்ள காவலர்களும் மே 2ஆம் தேதி முதல் விடுப்பை நீட்டிக்கக்கூடாது எனவும், மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவுறுத்தல், களப்பிரிவுகள் மற்றும் சிறப்புப் பிரிவுகளில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கும் பொருந்தும் எனவும் கூறியுள்ளார்.

You May Also Like

More From Author