கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Estimated read time 0 min read

கோவையில் தமிழக பாஜக மையக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து பாஜக மையக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது.

பீளமேடு பகுதியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் பாஜக தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன், அர்ஜூன மூர்த்தி, கே.டி.ராகவன், கருப்பு முருகானந்தம், எஸ்.ஆர்.சேகர், கனகசபாபதி, ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், தேர்தல் பணிகளில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கபட்டது.

இதனை தொடர்ந்து, பி.எல்.சந்தோஷை முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேசினர்.

You May Also Like

More From Author