சீற்றத் தடுப்பு, பேரழிவு அபாயக் குறைப்பு மற்றும் நிவாரண திறனை உயர்த்துவது குறித்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு ஏப்ரல் 28ஆம் நாள் பிற்பகல் 25வது குழு பயிலரங்கை நடத்தியது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் விவாதத்தைக் கேட்டறிந்த பிறகு கூறுகையில், சீற்றத் தடுப்பு, பேரழிவு அபாயக் குறைப்பு மற்றும் நிவாரண பணியைச் செவ்வனே மேற்கொள்ளும் வகையில், கட்சியின் பன்முகத் தலைமை, மக்களே முதன்மை மற்றும் உயிரே முதன்மை என்ற கருத்து, இயற்கை விதிகள், தடுப்புப் பணிக்கு முக்கியத்துவம் ஆகியவற்றில் ஊன்றி நிற்க வேண்டும் என்றார். மேலும், இயற்கை சீற்றத்தைத் தடுப்பதற்கான திறனை உயர்த்தி, பொது மக்களின் உயிர் மற்றும் சொத்துகளின் பாதுகாப்பைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
