பனாமா தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை ஆதாரமற்றது: சீனா

பனாமாவில் உள்ள துறைமுகம் தொடர்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லின் ஜியான் 29ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கேள்விக்கு பதிலளிக்கையில், அமெரிக்காவின் தொடர்பான கூற்றுக்கள் ஆதாரமற்றவை என்பதோடு, உண்மைகளைத் திரித்துள்ளன என்றார்.

மேலும், இத்துறைமுக விவகாரங்களை அரசியல்மயமாக்கியதும், பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகளாக மாற்றியதும், எங்கெங்கும் வதந்திகளையும் பரப்பியதும் அமெரிக்காவே ஆகும். பனாமாவிலுள்ள துறைமுகம் தொடர்பான விவகாரங்கள் குறித்த சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. சீனா தனது நியாயமான உரிமைகளையும் நலன்களையும் உறுதியாகப் பாதுகாக்கும் என்றும் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author