வரவேற்கபடுகின்ற ரென்மின்பி முதலீட்டை திரட்டுதல்

 

 

உலக அளவில் கொடுப்பனவு பயன்பாட்டில் ரென்மின்பி தற்போது உலகில் 4ஆவது இடத்திலும் வர்த்தக நிதித் திரட்டல் நாணயவரிசையில் 3ஆவது இடத்திலும் உள்ளது. இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட செய்தியில், அதிக ஏற்றத்தாழ்வுடன் விளங்கும் அமெரிக்க டாலர் மற்றும் ஐரோப்பிய யூரோ மதிப்புடன் ஒப்பிடும் போது, ரென்மின்பியின் மதிப்பு குறிப்பிட்ட அளவில் நிதானமாக உள்ளது. இதனால் நிதித் துறையில் ரென்மின்பியின் ஈர்ப்பு ஆற்றல் மேலும் உயர்ந்து வருகிறது என்று நிதி மதிப்பீட்டு நிறுவனங்கள் கருதுகின்றன. கையிருப்பு மற்றும் நுகர்வு ரீதியில் ரென்மின்பியின் தேவை தொடர்ந்து விரிவாகி வருவதோடு, ரென்மின்பி உலகமயமாக்க முன்னேற்றப் போக்கு, சாராம்ச முன்னேற்றம் அடைந்துள்ளது என்று வங்கித் துறையினர் தெரிவித்தனர்.

 

கசகஸ்தான் வளர்ச்சி வங்கி இவ்வாண்டின் செப்டம்பரில், 200 கோடி யுவான் மதிப்புள்ள ஒஃப் சோல் ரென்மின்பி கடன் பத்திரம் வினியோகித்துள்ளது. அக்டோபர் திங்களில் இந்தோனேசிய அரசு 600 கோடி யுவான் ஒஃப் சோல் ரென்மின்பி கடன் பத்திரங்களை வழங்கியது.

 

இது வரை, இவ்வாண்டில்,  87 ஆயிரம் கோடி ஒஃப் சோல் ரென்மின்பி கடன் பத்திரங்களை வெளியிடப்பட்டு, தொடர்ந்து 8 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author