ரஷியா டிசம்பர் 23ஆம் நாள் வெளியிட்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டாளிகள் பட்டியல் சர்வதேச சமூகத்தில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
இது குறித்து செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிப்பதாக கூறிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், உகாண்டா ஆகிய நாடுகள், கூட்டாளி நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இது, பிரிக்ஸ் ஒத்துழைப்பு புதிய நிலையில் காலடி வைத்துள்ளதை குறிக்கிறது என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், பிரிக்ஸ் அமைப்புமுறையின் பிரதிநிதித்துவ அளவு மேலும் விரிவடைவதோடு, அதன் செல்வாக்கும் அதிகரித்து வருகின்றது. தெற்கு உலகு நாடுகளிடையான ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் முக்கிய மேடையாக இது மாறுகின்றது என்று தெரிவித்தார்.