ஆப்கானிஸ்தானுக்கு சீன அரசு வழங்கிய முதலாவது தொகுதியான அவசர மனித நேய உதவி பொருட்களின் ஒப்படைப்பு நிகழ்வு ஜூலை 16ஆம் நாள் நடைபெற்றது.
ஆப்கானிஸ்தானுக்கான சீனத் தூதர் ஸாவ்சிங், ஆப்கானிஸ்தானின் தற்காலிக அரசின் அகதிகள் விவகாரத் துறை அமைச்சர் ஹக்கானி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஸாவ்சிங் கூறுகையில், திரும்பிய அகதிகளை ஆப்கானிஸ்தான் குடியமர்த்துவதற்கு உதவி செய்யும் விதம், சீன அரசு ஆப்கானிஸ்தானுக்கு அவசர மனித நேய உதவி பொருட்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது. பல்வேறு தரப்புகளின் முயற்சியுடன், ஆப்கானிஸ்தான் மக்கள் இன்னல்களைத் தோற்கடித்து, தாயகத்தை மீண்டும் கட்டியமைப்பது உறுதி என்றார்.