அமெரிக்க அரசுத் தலைவர் சீனாவில் பயணம் குறித்து இரு தரப்பும் தொடர்பு மேற்கொள்தல்

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின்ச்சியென் 12ஆம் நாள், செய்தியாளர் கூட்டத்தில், அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப், ஏப்ரல் திங்களில், சீனாவில் பயணம் மேற்கொள்வது குறித்து பதிலளித்தார்.

அவர் கூறுகையில்,

அரசுத் தலைவர்களின் பரிமாற்றம், சீன-அமெரிக்க உறவுக்கு நெடுநோக்கு வழிகாட்டலில் ஈடிணையற்ற பங்காற்றி வருகிறது. சிறிது காலத்துக்கு முன், இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டுள்ளனர்.

அப்போது, அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப், ஏப்ரல் திங்களில், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ளும் எதிர்பார்ப்பை மீண்டும் தெரிவித்தார்.

சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ள டிரம்புக்கும் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து இரு தரப்பும் தொடர்ந்து தொடர்புகள் மேற்கொண்டு வருகின்றன என்றார்.

You May Also Like

More From Author