சீனத் தலைமை அமைச்சர் லீ ச்சியாங் வங்கதேச தலைமை அமைச்சருடன் பேச்சுவார்த்தை

Estimated read time 1 min read

சீனத் தலைமை அமைச்சர் லீ ச்சியாங் ஜூன் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் வங்கதேச தலைமை அமைச்சர் தாரிக் ரஹ்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

லீ ச்சியாங் கூறுகையில், வங்கதேசத்துடன் இணைந்து, சுமுகமான அண்டை நாட்டுறவைக் கடைப்பிடித்து, ஒன்றுக்கு ஒன்று உத்திநோக்கு நம்பிக்கையை வலுப்படுத்தி, நடைமுறை ஒத்துழைப்பை விரிவாக்கவும், சீன-வங்கதேச உறவு தொடர்ந்து வளர்ச்சி அடைவதை முன்னேற்றி, இருநாட்டு மக்களுக்கு நன்மை புரியவும் சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

ஒரே சீனா என்ற கோட்பாட்டை உறுதியுடன் பின்பற்றும் வங்கதேசம், சீனாவுடன் பலதரப்பு தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக தாரிக் கூறினார்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அவர்களுக்கு முன்னிலையில் பல ஒத்துழைப்பு ஆவணங்கள் கையெழுத்தாகின.

You May Also Like

More From Author