தாய்லாந்து மற்றும் உஸ்பெகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இருப்புப்பாதைப் பராமரிப்பு வாகனங்கள் திங்கள்கிழமை யுன்னான் மாநிலத்தின் குன்மிங் நகரில் தரப் பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளன.
இவற்றில் தாய்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் 4 வாகனங்கள் இருப்புப் பாதை வழித்தடத்தின் துரிதமான சரிபடுத்தல், கட்டமைப்பு சீரமைப்பு மற்றும் வலிமை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும். இவை இருப்புப் பாதை வழித்தடத்தின் பராமரிப்பு பயனையும் தரத்தையும் பெரிதும் உயர்த்தும். குறிப்பாக உயர்வேக இருப்புப் பாதை மற்றும் பார இருப்புப் பாதையின் பாதுகாப்புத் தன்மைக்கும் சீரான இயங்குதலுக்கும் உத்தரவாதம் அளிக்க முடியும்.
உஸ்பெகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 9 வாகனங்கள், இருப்புப் பாதை மின்சார கம்பி வசதிகளின் சாதாரண பரிசோதனை மற்றும் பராமபிப்புப் பணியில் பயன்படுத்தப்படும்.
