அணு ஆயுதப் பரவல் தடுப்பு பற்றிய சீனாவின் நிலைப்பாடு

அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையின் 11ஆவது பரிசீலனை மாநாடு நியூயார்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஆயுத கட்டுப்பாட்டுப் பிரிவுத் தலைவர் சுன் சியாவ்போ ஏப்ரல் 29ஆம் நாள் நடைபெற்ற பொது விவாதத்தில் உரை நிகழ்த்துகையில், தற்போது உலகளாவிய பாதுகாப்பு நிலைமை சிக்கலமாகவும் கடினமாகவும் உள்ளது என்றும், மேலாதிக்கவாதம், வல்லரசு அரசியல் மற்றும் ஒருதரப்புவாதம் தான் அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கைக்கு உண்மையான அச்சுறுத்தலாக அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.

விரிவான அணு ஆயுத சோதனை தடை உடன்படிக்கையின் குறிக்கோள் மற்றும் கோட்பாட்டுக்கு சீனா ஆதரவளிப்பதாக வலியுறுத்திய அவர், அமெரிக்கா-பிரிட்டன்-ஆஸ்திரேலியா அணு ஆற்றல் நீர்மூழ்கி கப்பல் ஒத்துழைப்பினால் ஏற்படும் அணு ஆயுதப் பரவல் இடர் குறித்து பல்வேறு நாடுகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், உலகளாவிய உத்திநோக்கு அமைதியைச் சீர்குலைக்கும் இத்தகைய செயலைக் கூட்டாக எதிர்க்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், 2ஆவது உலகப் போரில் தோற்கடிக்கப்பட்ட ஜப்பான், தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல், அமைதி அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் 3 அணு ஆயுதமில்லா கொள்கைகளின் திருத்தத்தை தூண்டுவதோடு, தொலைதூர தாக்குதல் திறனை விரிவாக்கவும் கூட்டணி நாடுகள் தனது நாட்டில் அணு ஆயுதங்ளை நிலைநிறுத்தச் செய்யும் வகையிலும் ஜப்பான் செயல்படுகிறது. இது குறித்து சர்வதேச சமூகம் உயர் எச்சரிக்கையுடன் ஜப்பான் மீதான கண்காணிப்பை வலுப்படுத்தி, அந்நாடு அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பதை உறுதியுடன் தடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author