தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்க உள்ளது.
சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் 3 முக்கிய மையங்களில் எண்ணப்பட உள்ளது.
வாக்கு எண்ணிக்கையை ஒட்டி அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் சென்னை முழுவதும் 4 அடுக்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் இந்த போக்குவரத்து மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி 4 அடுக்கு பாதுகாப்பு
