சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை

Estimated read time 0 min read

துறைமுகம், ராயபுரம் தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. இதேபோல் திருவிக நகர் தொகுதியில் தவெக 10 தபால் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது.

துறைமுகம் தொகுதியில் 19 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சேகர்பாபு முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் அசோக் 9 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதேபோல் ராயபுரம் தொகுதியிலும் 10 வாக்குகள் பெற்று திமுக முன்னிலையில் உள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜெயக்குமார் 9 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். திருவிக நகர் தொகுதியில் தவெக 10 தபால் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. திருவிக நகர் தொகுதி தவெக வேட்பாளர் பல்லவி 10 வாக்குகளும், திமுக வேட்பாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் 9 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் 48 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். ஆர்.கே. நகரிலும் திமுக முன்னிலையில் உள்ளது.

You May Also Like

More From Author