மே 4ஆம் நாள் மாலை 16:40 மணிக்கு, ஹூ நான் மாநிலத்தின் லியு யாங் நகரிலுள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் கடும் வெடி விபத்து நிகழ்ந்தது. இதில் உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்பட்டது.
இந்த சம்பவம் நிகழ்ந்த பிறகு, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் கட்டளையிட்டார். அப்போது அவர் கூறுகையில்,
காணாமல் போனவர்களை வெகுவிரைவில் தேடி பார்க்க வேண்டும். காயமடைந்தவர்களை முயற்சியுடன் மீட்க வேண்டும். சமாளிப்பு பணி சீராக புரிய வேண்டும். இந்த சம்பவம் நிகழ்ந்த காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும். பல்வேறு பிரதேசங்களும் வாரியங்களும் படிப்பினையைப் பெற்று, பொது பாதுகாப்பு நிர்வாகத்தை வலுப்படுத்தி, பொது மக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார்.
