சீனாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் விளைநிலத்தின் பரப்பளவு

Estimated read time 0 min read

சீன இயற்கை மற்றும் மூலவள அமைச்சகம் செப்டம்பர் 19ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, சீனாவில் விளைநிலங்களின் பரப்பளவு கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

விளைநிலப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு பொறுப்புமுறைக்கான மதிப்பாய்வைச் செயல்படுத்துவது, பொருளாதார விருது மற்றும் தண்டனை அமைப்புமுறையை உருவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம், 2021ஆம் ஆண்டு முதல் இதுவரை, நாட்டின் விளைநிலத்தின் பரப்பளவு 11 ஆயிரத்து 720 சதுர கிலோமீட்டர் அதிகரித்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகக் குறைந்துவந்த விளைநிலத்தின் போக்கினை இது கட்டுப்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author