சீன அரசு முதலீடு செய்த பெரும்பாலான முதலீட்டுத் தொகை செயல்படுத்தப்பட்டுள்ளது

சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம் அக்டோபர் 8ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. இவ்வாண்டில் முக்கிய துறைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்தி, ஆக்கப்பூர்வமான முதலீட்டைச் சீனா தொடர்ந்து விரிவாக்கி வருகின்றது.

இது சீன அரசு முதலீட்டின் வழிகாட்டும் முன்னணிப் பங்காற்றியதோடு மட்டுமல்லாமல், அரசு சாரா முதலீட்டையும் முழு ஆர்வத்துடன் செயல்படுத்தியது என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் லியு சுஷே எடுத்துக்கூறினார்.

இவ்வாண்டு சீன அரசு செய்த பெரும்பாலான முதலீட்டுத் தொகை குறிப்பிட்ட திட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசு சாரா முதலீட்டுத் தறையில், இவ்வாண்டில், சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் 1,635 முக்கிய திட்டங்களைத் தனியார் மூலதனத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

அவற்றில், 441 தனியார் மூலதன திட்டங்களில் தனியார் மூலதனம் முதலீடு செய்தது. இதன் மொத்த முதலீட்டுத் தொகை 34ஆயிரத்து 480 கோடி யுவானாகும் என்றார்.

 

You May Also Like

More From Author