15ஆவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் சீனாவின் நவீனமயமாக்கலில் முக்கிய மைல்கல் காணப்படுவதாக வெளிநாட்டு ஊடங்கள் புகழாரம்

Estimated read time 0 min read

2026ஆம் ஆண்டு சீன தேசிய இரு கூட்டத்தொடர்கள் தொடங்கியதை அடுத்து சீனாவின் நவீனமயமாக்கலில் முக்கிய மைல்கல் காணப்படுவதாகவும், இவ்வண்டின் வளர்ச்சி திட்டத்தை உருவாக்கி 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கும் இவ்விரு கூட்டத்தொடர்களின் உத்திப்பூர்வ தொலைநோக்கு பார்வை, சர்வதேசச் சமூகத்தின் பரந்த கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் ஸ்பெயின் சீன சிந்தனை நிறுவனம், பிரிட்டனின் தி கார்டியன், சிங்கப்பூரின் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பிபிசி, ஜப்பானின் நிக்கேய் ஆசியா உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், சீனா திறப்புக் கொள்கையைக் கடைபிடித்துள்ளதோடு, சீனாவுக்குள் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் நுழைவை எளிதாக்கி வருகிறது. இந்நடவடிக்கைகளின் மூலம், வெளிப்புற அழுத்தத்தின் கீழ் சீனா பொருளாதார நெகிழ்வுத்தன்மையைக் காட்டி, வெளிநாட்டு வர்த்தகத்தைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முடியும் என்றும் அவற்றின் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author