கியூப உள் விவகாரங்களின் மீதான தலையீட்டுக்கு சீனா எதிர்ப்பு

கியூபாவின் மீதான தடை நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரமாக்கியது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,

கியூபாவின் மீதான தடை நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரமாக்கியுள்ளது. கியூப மக்களின் வாழும் உரிமையையும் வளர்ச்சி உரிமையையும் இது மீறியது. சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாட்டை இது மீறியது. நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பைப் பேணிக்காக்கும் கியூபாவுக்கு சீனா உறுதியாக ஆதரவு அளிக்கின்றது.

கியூப உள் விவகாரங்களில் தலையீடு செய்வதை சீனா உறுதியாக எதிர்க்கின்றது. கியூபாவின் மீதான அனைத்து தடை நடவடிக்கைகளையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுக்கின்றது என்றார்.

You May Also Like

More From Author