சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் சீனத் தேசிய பீக்கிங் இசை நாடக நிறுவனத்தைச் சேர்ந்த இளம் கலைஞர்களுக்குப் பதில் கடிதம் அனுப்பினார்.
தன்னுடைய கடிதத்தில் இந்த நாடக நிறுவனம் நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அனைத்து நடிகர்களுக்கும் ஷிச்சின்பிங் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் இந்த நாடக நிறுவனம் நிறுவப்பட்ட பிறகு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கலைக் கொள்கைகளையும் கோட்பாட்டையும் செயல்படுத்தி, பல புகழ்பெற்ற நாடகங்களை வெளிப்படுத்தியது.
அவர் மேலும் கூறுகையில், புதிய காலகட்டத்திற்கேற்ப இலக்கியம் மற்றும் கலை இலட்சியத்தின் செழிப்புக்கும் பண்பாட்டுக் சக்தியை உருவாக்குவதற்கும் நீங்கள் பங்காற்ற வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.