ஆப்கானிஸ்தான் தலைமை அமைச்சர் முகம்மது ஹாசன் அகுண்ட் ஆகஸ்ட் 2-ஆம் நாள் அகுண்ட் காபூலில் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயைச் சந்தித்துரையாடினார்.
ஆப்கான் மீது சீன அரசு மற்றும் மக்களின் அன்பு மற்றும் ஆக்கப்பூர்வமான மனப்பான்மையைக் கொண்டுள்ளதற்கு அகுண்ட் நன்றி தெரிவித்தார். சீனா உலகிலுள்ள நியாயமான சக்தியாக விளங்கியுள்ளது. சீனத் தரப்புடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி ஆக்கப்பூர்வமான தொடரவல்ல நட்புறவை முன்னேற்ற எதிர்பார்ப்பதாகவும் அகுண்ட் கூறினார்.
ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் வளர்ச்சிக்கான உரிமை உண்டு. ஆப்கான் அரசின் தலைமையில், மேலும் பெரிய வளர்ச்சியடையுமென நம்புவதாக வாங்யீ தெரிவித்தார்.