சீனாவின் கடல் சார் உரிமை நலன்களை சீர்குலைக்க ஒருபோதும் அனுமதிக்காது

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியன் ஜூன் 9ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேள்விக்குப் பதிலளிக்கையில், தைவான் தீவுக்கு கிழக்கிலுள்ள கடற்பரப்பில் பிரத்யேக பொருளாதார மண்டலத்தையும் கடலடி கண்ட திட்டையும் சீனா கொண்டுள்ளது என்று வலியுறுத்தினார். ஜப்பானும் பிலிப்பைன்ஸும் சீனாவைப் புறந்தள்ளி, கடற்பரப்பு எல்லை வரையறை பற்றிய பேச்சுவார்த்தையை அனுமதியின்றி தொடங்கியது, ஐ.நாவின் கடல் சட்டம் பற்றிய பொது ஒப்பந்தம் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களையும் சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிகளையும் கடுமையாக மீறுவதோடு, சீனாவின் கடல் சார் உரிமை நலன்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இதற்கு சீனா ஒருபோதும் அனுமதி அளிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author