இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டை விண்ணுக்கு ஏவிய தமிழ்நாட்டு நிறுவனம்  

இந்தியா தனது முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான RHUMI 1’ஐ சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்பேஸ் சோன் இந்தியாவால் உருவாக்கப்பட்ட இந்த ராக்கெட், சென்னை திருவிடந்தை, இசிஆரில் உள்ள டிடிடிசி மைதானத்தில் இருந்து மொபைல் லாஞ்சர் மூலம் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட் மூன்று கியூப் செயற்கைக்கோள்கள் மற்றும் ஐம்பது பிகோ (PICO) செயற்கைக்கோள்களை விண்ணுக்கு கொண்டு சென்றுள்ளது.

இந்த திட்டத்தில் ஒத்துழைத்த மார்டின் குழுமம், ராக்கெட்டின் பல்துறை திறனை மேலும் மேம்படுத்தும் வகையில், மொபைல் லாஞ்சரைப் பயன்படுத்தி ஏவுதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டது.

You May Also Like

More From Author