சீன-ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

Estimated read time 1 min read

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, மே 6ம் நாள் பெய்ஜிங்கில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்ச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஈரான்-அமெரிக்க பேச்சுவார்த்தையின் புதிய நிலைமை பற்றி அராக்ச்சி அறிமுகம் செய்தார். அரசியல் நெருக்கடி இராணுவ முறையால் தீர்க்கப்பட முடியாது. நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய கண்ணியத்தை ஈரான் உறுதியாகப் பேணிக்காத்து, முழுமையான நிரந்தர தீர்வை தொடர்ந்து நாடும் என்று அவர் தெரிவித்தார்.

சண்டை மூண்ட பிறகு, அமைதிக்கான பேச்சுவார்த்தையை சீனா முன்னெடுத்து வருகிறது. மத்திய கிழக்கு பகுதியின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காப்பது குறித்து, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த 4 அம்சக் கருத்துக்கள் சர்வதேச சமூகத்தில் வரவேற்கப்படுகின்றன என்று வாங்யீ வலியுறுத்தினார்.

வாங்யீ மேலும் கூறுகையில், மத்திய கிழக்கு பகுதி அமைதியின் மீட்சிக்குப் பங்காற்றும் வகையில், அமைதி பேச்சுவார்த்தையை துவக்குவதற்குத் தொடர்ந்து உதவியளிக்க சீனா விரும்புவதாகவும் தெரிவித்தார்.

பொது அக்கறை கொண்ட சர்வதேச சூடான பிரச்சினைகள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

You May Also Like

More From Author