+1 நேரடி தனித்தேர்வில் தமிழில் 95 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு

Estimated read time 0 min read

வந்தவாசி , மே 23:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் சிறப்பு பயிற்சி பெற்று இந்த ஆண்டு மார்ச்சு மாதம் நடைபெற்ற +1 நேரடி தனித்தேர்வு எழுதிய மாணவி சித்ரா தமிழ் பாடத்தில் 95 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார்.

அவருக்கான பாராட்டு விழா கல்வி மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் கோ.ஸ்ரீதர், முதுகலை தமிழ் ஆசிரியர் பூங்காவனம், ஸ்போக்கன் இங்கிலீஸ் ஆசிரியர் கு.சதானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

இறுதியில் ஏற்புரை வழங்கிய மாணவி சித்ரா தமிழ் பாடத்தில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளதால் அதிக மதிப்பெண் பெற்றேன் என்று கூறினார்.

You May Also Like

More From Author