சீன சர்வதேச முதலீடு மற்றும் வர்த்தகப் பொருட்காட்சி துவக்கம்

24ஆவது சீன சர்வதேச முதலீடு மற்றும் வர்த்தகப் பொருட்காட்சி 8ஆம் நாள் ஃபு ஜியன் மாநிலத்தின் சியா மென் நகரில் துவங்கியது. முதலீடு மூலம் உலகை இணைப்பது என்ற தலைப்பில் நடைபெறும் இப்பொருட்காட்சியின் மொத்த கண்காட்சி பரப்பளவு ஒரு லட்சத்து 20 ஆயிரம் சதுர மீட்டராகும். 119 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த வணிகர்கள் இதில் கலந்து கொண்டனர்.
சீன வணிக அமைச்சகத்தின் முதலீட்டு முன்னேற்ற விவகாரப் பணியகத்தின் துணை தலைவர் யூ குவாங்ஷெங் கூறுகையில், இப்பொருட்காட்சியில் உள்ள தொழில் புத்தாக்க வளர்ச்சி அரங்கில் எண்ணியல் பொருளாதாரம், புதிய எரிசக்தி, பசுமை புத்தாக்கம் முதலிய துறைகள் தொடர்பாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதோடு, வினியோக சங்கிலி புத்தாக்க காட்சி பகுதி முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ளது என்று அறிமுகப்படுத்தினார்.

You May Also Like

More From Author