“நடுவழியில் வெடித்துச் சிதறிய படகு!” டிரம்பின் அடுத்த அதிரடி.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!! 

Estimated read time 1 min read

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக போர் அறிவித்து ராணுவ ரீதியான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, ‘பென்டானில்’ என்ற போதைப்பொருளை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ஒரு ரசாயன ஆயுதமாக வகைப்படுத்தி, அதை ஒழிக்க அமெரிக்க ராணுவம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு நாட்களில் கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் கடற்பகுதிகளில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் படகுகள் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். பசிபிக் பகுதியில் நடந்த தாக்குதலில் மூன்று போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டதை அமெரிக்க ராணுவத்தின் தெற்கு கட்டளைப்பிரிவு உறுதி செய்துள்ளது.

<a href=”http://

இது தொடர்பாக அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோவில், வேகமாகச் செல்லும் படகு ஒன்று குண்டுவெடிப்பில் சிதறி தீப்பற்றி எரிவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. லத்தீன் அமெரிக்க கடல் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் பாதைகளைக் குறிவைத்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்தத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில் 191 கடத்தல் காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடத்தல்காரர்களை வெறும் குற்றவாளிகளாகப் பார்க்காமல் “போதைப்பொருள் பயங்கரவாதிகள்” என அழைத்து, அவர்களை ராணுவத்தைக் கொண்டு ஒடுக்கும் டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author