கோடிகளில் சம்பளம்! இனி லட்சங்களில் வருமானம்: தமிழக முதல்வராக விஜய் பெறப்போகும் ஊதியம் எவ்வளவு?  

Estimated read time 0 min read

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய், விரைவில் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.
தனித்துப்போட்டியிட்டுப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை நெருங்கியுள்ள அவர், பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளார்.
சினிமாவில் ஒரு படத்திற்கு சுமார் ₹275 கோடி வரை சம்பளம் வாங்கிய விஜய், இனி முதலமைச்சராக மாதம் ₹2,05,000 மட்டுமே ஊதியமாகப் பெறுவார்.
ஊதியம் குறைந்தாலும், இசட் பிளஸ் பாதுகாப்பு, அரசு இல்லம் மற்றும் சிறப்பு வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு உயர்தர சலுகைகள் அவருக்கு வழங்கப்பட உள்ளன.
திரையுலகில் உச்சநட்சத்திரமாக திகழ்ந்து கோடிகளில் சம்பளம் வாங்கிய விஜய், இனி மக்கள் பணியில் ஒரு அரசு ஊழியராகப் பெறப்போகும் ஊதியம் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

You May Also Like

More From Author