முதல் 8 திங்களில் சீனா முழுவதும் 332 கோடி ரெயில் பயணங்கள்

Estimated read time 0 min read

சீனா முழுவதும் ஜனவரி முதல் ஆக்ஸ்ட் வரை,332 கோடி ரெயில் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட இது 3.9 விழுக்காடு அதிகரித்து, வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியது.

புள்ளிவிவரங்களின்படி, நாளுக்குச் சராசரியாக 11,508 தொடர்வண்டிகள் இயங்கப்படுகின்றன. இது கடந்த ஆண்டை விட 5 விழுக்காடு அதிகமாகும். இக்காலத்தில் குவாங்சோ—செச்சேன்—ஹாங்காங் இருப்புப் பாதை மூலம் 2  கோடியே 34 இலட்சத்து 8 ஆயிரம் பயணங்கள் எல்லை கடந்து மேற்கொள்ளப்பட்டன. அதேபோல், சீன—லாவோஸ் இருப்புப் பாதை மூலம் 2 இலட்சத்து 45 ஆயிரம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் வெளிநாட்டுப் பயணிகள் மேற்கொண்ட ரெயில் பயணங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 66 இலட்சத்து 83 ஆயிரத்துக்கும் அதிகமாகும். இது கடந்த ஆண்டை விட 33.3 விழுக்காடு அதிகரித்துள்ளது

You May Also Like

More From Author