அடுத்த தேர்தல்ல 234-ம் நமக்கேதான்… அமைச்சர்‌ செங்கோட்டையன் உடைத்த சீக்ரெட்….!! 

Estimated read time 0 min read

அதிமுகவில் இருந்து தவெகவிற்கு வருவதற்கு இன்னும் 10, 20 பேர் தயார் நிலையில் இருக்கிறார்கள் என்று தவெக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளது அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

அடுத்த முறை தேர்தல் வந்தால் 234 தொகுதிகளிலும் நாமதான் வெற்றி பெறுவோம் என்று அவர் மிக அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் தவெகவே ஆட்சியைப் பிடிக்கும் என்றும், தேர்தலில் தவெகவின் வெற்றி உறுதி என்றும் அவர் நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.

மேலும், எதிர்க்கட்சியான திமுகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய அவர், வாக்குகளைப் பெறுவதற்காக திமுகவினர் ஓட்டுக்கு அரை பவுன் தங்கம் வரை மக்களுக்குக் கொடுத்ததாக ஒரு பகிரங்கமானக் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “மக்களுக்கு எந்தவித பண பலமும் காட்டாமல், ஆடம்பரச் செலவுகளே செய்யாமல் ஒரு நேர்மையான ஆட்சி அமைய முடியும் என்றால், அது செலவே பண்ணாமல் வரக்கூடிய தவெக ஆட்சியாகத்தான் இருக்கும்” என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியான திமுக மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தியும், அதிமுகவினர் தவெகவில் இணைய வரிசையில் நிற்பதாகக் கூறியும் அமைச்சர் செங்கோட்டையன் பேசிய இந்தத் காரசாரமான பேச்சு, தற்போது சோஷியல் மீடியாவிலும் அரசியல் வட்டாரத்திலும் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author