சட்டப்பேரவை தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ் கட்சியிடம் 5 இடங்கள் உள்ளன. தவெகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது.
இதனையடுத்து, ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியது தவெக. இது தொடர்பாக அக் கட்சியின் தலைவர் விஜய் தலைமையிலான குழுவினர் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேற்று சந்தித்தனர். மேலும், விஜய் முதலமைச்சராக பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மும்முரமாக நடைபெற்று வந்தது.
ஆட்சி அமைக்க உரிமை கோரியும், ஆளுநர் அழைப்பு விடாத நிலையில், தவெக தலைவர் விஜய் தலைமையிலான குழுவினர் தொடர்ந்து 2-வது நாளாக இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்தனர்.
இந்நிலையில் 40 நிமிடங்கள் ஆளுநர் உடன் தலைவர் விஜய் ஆலோசனைக்கு பின்னர் ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டார் தலைவர் விஜய்.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் இன்னும் சற்று நேரத்தில் அழைப்பார் என கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக தவெக தலைவர் விஜய்க்கு தற்போதைய சூழலில் பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் அர்லேகர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தவெகவிடம் பெரும்பான்மை இல்லை எனவும் தவெக தலைவர் விஜய்க்கு தற்போதைய சூழலில் பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் அர்லேகர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பான்மை இருக்கிறது என நிரூபித்தால் மட்டுமே விஜய்க்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் முடிவு எனவும் கூறப்படுகிறது.
ஆளுநர் கேட்ட கேள்வி :
113 எம்எல்ஏக்களை வைத்து எப்படி ஆட்சி அமைப்பீர்கள்..? – தவெக தலைவர் விஜயிடம் ஆளுநர் கேள்வி
➤வேறு எந்த கட்சி தவெக அரசை ஆதரிக்கும்..? – ஆளுநர்
➤113 எம்எல்ஏக்களை வைத்து நிலையான அரசு அமைக்க முடியுமா..? – ஆளுநர்
➤ஆட்சி அமைப்பது தொடர்பான சில விளக்கங்களை கேட்க விஜய்க்கு ஆளுநர் அழைப்பு
➤பதவி ஏற்ற பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என எப்படி நம்புகிறீர்கள்..? – ஆளுநர்
➤பெரும்பான்மை கிடைத்துவிடும் எனும் யூகத்தின் அடிப்படையில் செயல்பட முடியுமா..? – ஆளுநர்
