தமிழக அரசியலில் நிலவி வரும் இழுபறி நீடிக்கும் வேளையில், தவெக தலைவர் விஜய் மற்றும் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் இடையிலான இரண்டாவது சந்திப்பும் எவ்வித முடிவும் எட்டப்படாமல் முடிவுக்கு வந்துள்ளது.
108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை வழங்கினால் மட்டுமே ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்பதில் ஆளுநர் உறுதியாக உள்ளார்.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க ரகசியமாகத் திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மக்களால் அதிக இடங்களில் வெற்றி பெறச் செய்யப்பட்ட தவெக-வைத் தள்ளிவைத்துவிட்டு, திராவிடக் கட்சிகள் கூட்டணி அமைத்தால், TVK கட்சியின் 107 எம்.எல்.ஏ-க்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வார்கள் என்று அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
107 எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா செய்வோம்!: தவெக அதிரடி முடிவு என தகவல்
