திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கணக்கில் வராத 10 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதே போல கதிர் ஆனந்தின் நண்பர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவரிடமும் 11 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் விசாரணைக்காக கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
அப்போது வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
