சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகுறித்து சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என்.அண்மையில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது.
இந்த கருத்து கணிப்பில் 91.3விழுக்காட்டு பதிலளித்தவர்கள், அமெரிக்கா கூடுதல் வரி
விதிப்பது போன்ற மேலதிக்கமான செயல் வழிமுறையில் வேறு நாடுகளின் வளர்ச்சி
உரிமைகளைப் பறிமுதல் செய்வதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வரி
போராட்டத்தில் எந்த தரப்புக்கும் மேலும் அதிக பாதிப்பு ஏற்படுத்துவது குறித்து,
அமெரிக்காவுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு மேலும் அதிகமாக இருக்கும் என்று
67.7விழுக்காட்டினர் தெரிவித்தனர். சீனாவின் நலன்களுக்கு அதிக பாதிப்பு
ஏற்படுத்தும் என்று 8.9விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். இரு தரப்பின்
நலன்களும் பாதிக்கப்படும் என்று 23.4விழுக்காட்டினர் தெரிவித்தனர். மேலும், வரி
விதிப்பு தொடர்பான அமெரிக்காவின் அணுகுகள் குறித்து, பேச்சுவார்த்தை நடத்த
விருப்பம் தெரிவித்ததோடு புதிய தடை விதிப்பதாக அச்சுறுத்தி கூறும் செயலில்
முரண்பாடுகள் உள்ளது என்று 92.5விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தகப்
பிரச்சினையில் சீனாவும் அமெரிக்காவும் விரிவான பொது நலன்கள் மற்றும் பரந்த அளவிலான
ஒத்துழைப்பு வாய்ப்புகளை கொண்டுள்ளன. இரு தரப்பும் சீன-அமெரிக்க பொருளாதார மற்றும்
வர்த்தக கலந்தாய்வு அமைப்புமுறையை முழுமையாக பயன்படுத்தி, இரு நாட்டு பொருளாதார
மற்றும் வர்த்தக உறவுகளின் சீரான, நிலையான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்ற
வேண்டும் என்று 88.4விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.
ஆங்கிலம், ஸ்பெனிஷ், பிரஞ்சு, அரபு
மற்றும் ரஷிய மொழிகளில் வெளியிடப்பட்ட சி.ஜி.டி.என். கருத்துக்கணிப்பில் 24மணி நேரத்திற்குள்
6572 பேர் பங்கேற்றனர்.