தவெக ஆட்சியமைக்க விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவளிக்க வேண்டும் – ராமதாஸ்!

Estimated read time 1 min read

சென்னை : : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி (பிஎம்கே) நிறுவனர் ராமதாஸ் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது “தமிழ்நாட்டு மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சி, அதே நோக்கத்துடன் சட்டமன்றத் தேர்தலிலும் களம் கண்டது. இருப்பினும், தேர்தல் முடிவுகளை கட்சியானது மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான எந்தவொரு வாய்ப்பினையும், அதிகாரத்தையும் மக்கள் பாஜகவுக்கு வழங்கவில்லை.

மக்களின் விருப்பத்தையும், தேர்தல் முடிவுகளையும் நாங்கள் உளமார மதிக்கிறோம்.எனவே, தமிழக பாஜக தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆட்சி அமைக்கும் எவ்வித முயற்சியிலும் கட்சியானது எவ்வித நேரடிப் பங்களிப்பையும் மேற்கொள்ள விரும்பவில்லை. மேலும், ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்பதையும் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் மேலும் கூறியதாவது“தவெக 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், 118 இடங்கள் கிடைக்காததால் ஆளுநர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. விஜய் பல கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளார். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆதரவு கடிதம் கொடுத்துள்ளன. ஆளுநர் திரும்பத் திரும்ப 118 உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதங்களை கேட்பது உள்நோக்கம் கொண்ட செயல் என்று தெரிகிறது.

பின்புலத்தில் பாஜக ஆளுநரை இயக்குவதாக பெரும்பான்மையான மக்கள் பேசுகின்றனர்.மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்க வேண்டியது அனைவரின் கடமை. தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியான தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது.திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தமிழக நலன் கருதி ஆதரவளித்துள்ளன. தமிழக மக்களுக்காக அரசியல் செய்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தவெகவுக்கு ஆதரவளிக்க வேண்டும். அவரது ஆதரவுடன் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்து, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு அவர் அளிக்கும் ஆதரவை வரவேற்கிறேன்.” எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author