மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மொத்தம் உள்ள இடங்களில் 207 இடங்களை வென்று தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சுவேந்து அதிகாரி ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
மக்களின் இந்தத் தீர்ப்பை “வரலாற்றுச் சிறப்புமிக்கது” என்று குறிப்பிட்ட முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, தேர்தல் பிரச்சாரத்தின் போது அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் தனது அரசு நிறைவேற்றும் என்றும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு
