தமிழகத்தில் நடிகர் விஜய்க்கு இன்னும் பெரும்பான்மை கிடைக்காததால் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
இன்று திருமாவளவன் விஜய்க்கு சாதகமான அறிவிப்பை வெளியிட்டால் 118 என்ற மேஜிக் நம்பர் கிடைத்து நடிகர் விஜயின் சிக்கல் தீர்ந்து இன்று மாலை முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் அமமுக சார்பில் போட்டியிட்டு மன்னார்குடி பகுதியில் வெற்றி பெற்ற எம்எல்ஏ தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு வழங்கியதாக நடிகர் விஜய் ஆளுநரிடம் கடிதம் கொடுத்த நிலையில் டிடிவி தினகரன் குதிரை பேரம் நடப்பதாக குற்றம் சாட்டின் புகார் கொடுத்துள்ளார்.
அதன் பிறகு டிடிவி தினகரனை சந்தித்த எம்எல்ஏவும் விஜய்க்கு தான் அவ்வாறு எந்தவிதமான ஆதரவு கடிதத்தையும் வழங்கவில்லை அது போலி என்று கூறினார். இதனால் மன்னார்குடி எம்எல்ஏ கையெழுத்து போடும் வீடியோவை தமிழக வெற்றி கழகம் வெளியிட்டது. இது பல்வேறு கேள்விகளையும் விவாதத்தையும் ஏற்படுத்திய நிலையில் இன்று டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசியதாவது, மன்னார்குடி எம்எல்ஏ கையெழுத்து போட்டார் என்று கூறினால் அந்த வீடியோவின் உண்மை தன்மையை முதலில் கூறுங்கள். கையெழுத்து போட்ட உண்மையான கடிதம் எங்கே.? இந்த வீடியோவை எடுத்தது விஜயா செங்கோட்டையனா இல்லை ஆதவ் அர்ஜுனாவா சொல்லுங்கள். இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது யார் எடுத்தது என்பதை கூற முடியுமா.? விஜய் எனக்கு மாமனா இல்ல மச்சானா நான் எதற்காக தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.
நடிகர் விஜய் முதலமைச்சர் ஆவதற்கு போர்ஜரி செய்து கொண்டிருக்கிறார். ஊழலை ஒழிப்பேன் என்று கூறிவிட்டு தற்போது முதலமைச்சர் ஆவதற்கு அவர் ஊழல் செய்கிறார்.
இதனால் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றால் அது பேரழிவு தான். மேலும் காரில் இருந்தபடி கையெழுத்து போடுவது போன்ற வீடியோ ஃபேக் அல்லது ஏஐ வீடியோவாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
