சர்வதேச சமரச அமைப்பின் செல்வாக்கு

மே 30ஆம் நாள், சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தில், 33 நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச சமரச அமைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.

இவ்வமைப்பு அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டு, 2026ஆம் ஆண்டின் துவக்கத்தில் இயங்கவுள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் தலைமையகம் ஹாங்காங்கில் அமைக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கத்தின் மூலம், சர்வதேச சர்ச்சையைத் தீர்க்கும் அரசாங்கங்களுக்கிடையிலான  முதல் சர்வதேச நீதி அமைப்பு இதுவே ஆகும். சீனா உள்ளிட்ட 18 நாடுகள் இவ்வமைப்பை நிறுவியுள்ளன.

இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட 33 நாடுகளில், பெரும்பாலான நாடுகள், வளரும் நாடுகளாகும். முன்பு, சர்வதேச சர்ச்சை ஏற்பட்ட போது, உலகின் தெற்கு நாடுகளின் நலன்கள் பேணிக்காக்கப்படவில்லை. எதிர்காலத்தில், இந்த சர்வதேச சமரச அமைப்பு, சர்வதேச சர்ச்சைகளைத் தீர்க்கும் புதிய வழிமுறைகளை வழங்கும்.

சர்வதேச நீதி துறையில் புதுப்பிப்பு நடவடிக்கை, சர்வதேச சமரச அமைப்பு ஆகும். சர்வதேச மேலாண்மையை முழுமைப்படுத்துவதற்கு நீதி சேவையை இது வழங்கும். உலக அமைதியைப் பேணிக்காப்பதற்காக சீனா ஆற்றிய இன்னொரு பங்கு இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author