ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடல் சீற்றம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

ராமேஸ்வரம் தீவு பகுதியில் சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய வானிலை மையம் அறிவித்தப்படி, ராமேஸ்வரம் தனுஷ்கோடி மற்றும் பாம்பன் கடற்பகுதியில் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசி வருவதுடன், கடல் சீற்றமும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல், தங்கள் படகுகளை பாதுகாப்பாக கடல் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும், தனுஷ்கோடி வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கவும் கடலில் குளிக்கவும் அனுமதிக்கப்படாததால், சாலை ஓரமாக நின்று கடலின் அழகை ரசித்தனர்.

You May Also Like

More From Author