“பெண்களுக்கு ஒரு பிரச்சனைன்னா இனி இவங்க வருவாங்க!” – முதலமைச்சரே நேரடியாகக் கவனிப்பார்..!!! 

Estimated read time 0 min read

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய், தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போலவே பெண்கள் பாதுகாப்பிற்கு அதீத முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’யை உருவாக்கி அதிரடி காட்டியுள்ளார்.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், முதற்கட்டமாகக் காவல்துறை தலைமையகத்தில் இந்தச் சிறப்புப் படை உருவாக்கப்படும் என்றும், இது நேரடியாக முதலமைச்சரின் கண்காணிப்பின் கீழேயே இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், அவர்களுக்கு உடனடி பாதுகாப்பு வழங்குதல் போன்ற பணிகளில் இந்த அதிரடிப்படை ஈடுபடும். “பெண்கள் பாதுகாப்பில் நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்” என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் முழங்கிய நிலையில், கோட்டைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே இந்த ‘சிங்கப்பெண்’ படையை அமைத்திருப்பது தமிழகப் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author