இன்று சென்னை – திருவண்ணாமலை மெமு ரயில் ரத்து..!

Estimated read time 1 min read

ஜூன் 16, 18 ஆகிய தேதிகளில், சென்னை கடற்கரை – திருவண்ணாமலைக்கு மாலை 6 மணி (66033), காட்பாடி – திருப்பதிக்கு இரவு 9.10 மணி ( 67210), , திருப்பதி – காட்பாடிக்கு இரவு 7.10 மணிக்கு (67209) இயக்கப்படும் மெமு பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இது தவிர, திருவண்ணாமலை – தாம்பரத்துக்கு ஜூன் 17, 19 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் மெமு பயணிகள் ரயில் (66034) ரத்து செய்யப்பட உள்ளது.

பகுதி ரத்து: ஜூன் 16, 18 ஆகிய தேதிகளில், அரக்கோணம் – காட்பாடிக்கு இயக்கப்படும் மெமு பாசஞ்சர் ரயில் (66057), சேவூர் – காட்பாடி இடையேயும், விழுப்புரம் – காட்பாடிக்கு, இரவு 7.10 மணிக்கு புறப்படும் மெமு பயணிகள் ரயில் (66026), வேலூர் – காட்பாடி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

கும்மிடிப்பூண்டி மார்க்கம்: கவரைப்பேட்டை – கும்மிடிப்பூண்டி இடையே ரயில்வே பொறியியல் பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் உள்பட 19 ரயில்களின் சேவையில் ஜூன் 16, 19 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளன. இத்தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author