அறிவியல் தொழில் நுட்ப நாளேடு நிறுவப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தலைமை செயலாளரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் வாழ்த்து செய்தி அனுப்பினார்.
இதில் அவர் கூறுகையில்,
புதிய துவக்கத்தில், அறிவியல் தொழில் நுட்ப நாளேடு நிறுவனம், புதிய யுகத்தில் சீன தனிச்சிறப்புடைய சோஷலிச சிந்தனையைக் கற்றுக்கொண்டு, நடைமுறைப்படுத்தி, சரியான அரசியல் திசையில் ஊன்றி நின்று, பரப்புரை வழிமுறைகளைப் புதுப்பித்து, அறிவியலாளர்களின் எழுச்சியை வெளிக்கொணர்ந்து, சீன அறிவியல் தொழில் நுட்பத் துறையின் புதுப்பிப்புக் கதைகளைச் சீராக கூற வேண்டும். உயர் நிலை அறிவியல் தொழில் நுட்பத்தின் சுயவலிமையை நனவாக்குவதற்கும் அறிவியல் தொழில் நுட்ப வல்லரசு கட்டுமானத்துக்கும் மேலதிக பங்காற்ற வேண்டும் என்றார்.
