பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி: 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்  

Estimated read time 1 min read

இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று பெரும் சரிவுடன் தொடங்கியுள்ளது.
வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex) 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச் சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் உருவான உலகளாவிய பொருளாதார நெருக்கடியே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author