உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் குஜராத் – பிரதமர் மோடி பெருமிதம்!

Estimated read time 0 min read

ஒரு காலத்தில் உப்பு உற்பத்திக்காக மட்டுமே பெயர் பெற்ற குஜராத், தற்போது உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் மாநிலமாக உருவாகி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்று, பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வளர்ச்சித் துறையில் குஜராத் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

ஒரு காலத்தில் குஜராத் உப்பு உற்பத்தியைத் தவிர வேறெதுவும் செய்யாத நிலை இருந்தது எனவும் தற்போது, செமிகண்டக்டர் சிப்கள், மெட்ரோ ரயில் இன்ஜின்கள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை தயாரித்து வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

உலகம் சுற்றுச்சூழல் குறித்த கவலைகளை எதிர்கொண்டு வரும் இந்த நேரத்தில், காலநிலைத் துறை என்ற தனித்துறை அமைத்த நாட்டின் முதல் மாநிலமாக குஜராத் உருவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

You May Also Like

More From Author