செனகல் நாட்டில் அதிபர் தேர்தலை தள்ளி வைப்பது தொடர்பான மசோதாவை நிறைவேற்ற விடாமல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் அவை தலைவரை முற்றுகையிட்டு அமலியில் ஈடுபட்டனர்.
இந்த மாதம் நடைபெறுவதாக இருந்த அதிபர் தேர்தலை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் அதை எதிர்த்து போராட்டங்கள் வெடித்து வருகின்றன.
இந்நிலையில் அதிபர் தேர்தலை ஒத்தி வைக்கும் மசோதாவை நிறைவேற்ற விடாமல் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
அவைத் தலைவர் உடனடியாக வெளியேறிய பிறகும் அவர்கள் அவரது மைக்கை வைத்து பேசிக்கொண்டே இருந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.