தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், இன்று பிற்பகல் 2:30 மணியளவில் திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசவுள்ளார்.
17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்று வரும் நிலையில், இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பிற்பகல் 3:30 மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் அவரது இல்லத்தில் விஜய் சந்திக்க உள்ளார்.
தமிழக அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட வைகோவிடம் மாநில நலன் சார்ந்த ஆலோசனைகளை அவர் கேட்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அரசியல் நாகரிகம்: மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்! வைகோவிடமும் வாழ்த்துப் பெறத் திட்டம்!
