சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் மார்ச் 9ம் நாள், பிப்ரவரி திங்களுக்கான தேசிய நுகர்வு விலை குறியீடு, உற்பத்தியாளர் விலை குறியீடு ஆகிய தரவுகளை வெளியிட்டது.
பிப்ரவரி திங்களில், நுகர்வு விலை குறியீடு கடந்த திங்கள் மற்றும் கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட, முறையே 0.2 மற்றும் 0.7 விழுக்காடு குறைந்தது. பிப்ரவரியில், உற்பத்தியாளர் விலை குறியீடு, கடந்த திங்கள் மற்றும் கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட, முறையே 0.1 மற்றும் 2.2 விழுக்காடு குறைந்தது.
தொழில் உற்பத்தி நடவடிக்கை குறைவான காலத்தில் இருப்பது, சில சர்வதேச உற்பத்தி பொருட்களின் விலை ஏற்றத்தாழ்வு முதலிய காரணிகளால், உற்பத்தியாளர் விலை குறியீடு குறைந்தது. ஆனால் அதன் வீழ்ச்சியின் அளவு சற்று குறைந்துள்ளது.
படம்:VCG